36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

வெந்தயக்கீரையை உணவில் தினமும் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வெந்தயக்கீரை, பருப்பை வைத்து சப்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி
தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு – கால் கப்
வெந்தயக்கீரை – 3 கட்டு
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 5 பல்
மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க :

சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழையாமல் வேகவையுங்கள்.

* கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.

* பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் பூண்டை சேர்த்து வதக்கவும்.

* பூண்டு வதங்கியதும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள்.

* அடுத்து அதில் கீரை, மிளகாய்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பருப்பை சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* கீரை நன்றாக வெந்தவுடன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

* வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி ரெடி.

* தண்ணியாக இல்லாமல் சிறிது கெட்டியாக இருந்தால் தான் இந்த சப்ஜி சூப்பரான இருக்கும்..

Related posts

இஞ்சி – பூண்டுத் துவையல்tamil samayal recipe

nathan

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

nathan

கேழ்வரகுப் பணியாரம்-பாரம்பர்ய உணவுப் பயணம்!

nathan

ஆரோக்கியமான ஓட்ஸ் வெங்காய தோசை

nathan

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

nathan

சூப்பரான பாம்பே சாண்ட்விச்

nathan

மணத்தக்காளித் துவையல் செய்ய…..

nathan

எக் நூடுல்ஸ்

nathan

ஆப்பம் வீட்டில் தயாரிக்கும் முறை

nathan