29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
சிற்றுண்டி வகைகள்

பீட்ரூட் பக்கோடா

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 2 (துருவியது),
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்,
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்,
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்,
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது),
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது),
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் ஒரு பௌலில் எண்ணெயை தவிர்த்து அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின்பு அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிது சிறிதாக எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பீட்ரூட் பக்கோடா ரெடி!!!

Related posts

சத்தான சம்பா கோதுமை ரவை அடை

nathan

சிவப்பு அரிசி நட்ஸ் புட்டு

nathan

ஃபலாஃபெல்

nathan

பிரெட் மஞ்சூரியன் செய்ய….

nathan

முட்டை தோசை

nathan

பிரட் முட்டை உப்புமா

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு பூரி

nathan

கேழ்வரகுப் பணியாரம்-பாரம்பர்ய உணவுப் பயணம்!

nathan

அச்சு முறுக்கு

nathan