ஆரோக்கிய உணவு

முருங்கைக்கீரை பொரியல்

முருங்கைக்கீரை பொரியல்
தேவையான பொருட்கள் வருமாறு:-முருங்கைக்கீரை- 2 கப் அளவு,
வெங்காயம்-4,
பச்சை மிளகாய்-4,
தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்,
பூண்டு, புளி, வத்தல்- சிறிதளவு,
உப்பு தேவையான அளவு,
சமையல் எண்ணெய்- சிறிதளவு.தாளிப்பதற்குவெந்தயம், கடுகு, உளுந்தம் பருப்பு- தலா ஒரு தேக்கரண்டி
மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை.

செய்முறை:-

• முருங்கைக்கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

• தேங்காய் துருவல், வத்தல், புளி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, அம்மியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

• வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக அரிந்துகொள்ளவும்.

• அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய் விட்டு, காய்ந்த பின்னர் கீரையை அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் போட்டு வதக்கவும்.

• சிறிது நேரம் கழித்து, ஏற்கனவே அரைத்து வைத்திருந்த தேங்காய், வத்தல் உள்ளிட்டவற்றின் கலவையையும் சேர்த்து, நன்றாக கிளற வேண்டும். தேவையான உப்பு சேர்க்கவும்.

• பிறகு கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, பொரியலுடன் சேர்க்க வேண்டும்.

• இப்போது முருங்கைக்கீரை பொரியல் தயார் ஆகிவிடும்.

Related posts

பருப்பு கீரை சாம்பார்

nathan

நாகலிங்க பூவில் இவ்வளவு சிறப்புக்கள் இருக்கா?நம்ப முடியலையே…

nathan

உம்களுக்கு தெரியுமா தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை..!!

nathan

நல்ல சோறு – 1–சிறுதானிய உணவுகள், உணவே மருந்து!

nathan

உங்களுக்கு தெரியுமா காளானை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா…?

nathan

உணவு வழக்கத்தில் மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்

nathan

கொலஸ்ட்ராலை முற்றிலும் இல்லாதொழிக்கும் நல்லெண்ணைய்…!

nathan

இரகசியத்தை தெரிஞ்சு வச்சுக்கோங்க… மசாலா பொடிகள் சீக்கிரமே வண்டு புடிச்சு கெட்டு போகுதா..?

nathan

சுவையான தேங்காய் பன்

nathan