30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கிய உணவு

சுவையான அரைக்கீரை பொரியல்

பொதுவாக கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும், பலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும். அதிலும் அரைக்கீரையை பொரியல் செய்து சாப்பிட்டால் தான் சூப்பராக இருக்கும்.

இங்கு அரைக்கீரை பொரியலை சிம்பிளாக எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்களேன்…

Arai Keerai Poriyal
தேவையான பொருட்கள்:

அரைக்கீரை – 1 கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
துருவிய தேங்காய் – 1/4 கப்
சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் கீரையை போட்டு சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, மூடி வைத்து கீரையை வேக வைக்க வேண்டும்.

கீரையானது நன்கு வெந்து தண்ணீர் வற்றிய பின், அதில் தேங்காயை சேர்த்து கிளறி, சீரகப் பொடி மற்றும் பூண்டை தட்டி போட்டு கிளறி இறக்கினால், அரைக்கீரை பொரியல் ரெடி!!!

Related posts

காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை

nathan

சாப்பிடக்கூடாத காய்கறிகள் என்னென்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுக்கும் காய்ந்த திராட்சை

nathan

உங்கள் கவனத்துக்கு உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது நல்லதா?

nathan

தெரிஞ்சிக்கங்க…இலவங்கப் பட்டையின் 20 மருத்துவ குணங்கள்!!!

nathan

வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் சீரகக் குழம்பு

nathan

உங்களுக்கு தெரியுமா முட்டையை விட அதிக சத்துக்கள் நிறைந்த சில உணவுப்பொருட்கள்

nathan

தயிர் தரும் சுக வாழ்வு

nathan

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்

nathan