அதிக துக்கமோ, அதிக ஆனந்தமோ எதுவானலும் கண்களில் கண்ணீர் சுரக்கும். பலர் அறிய அழுவதை கவுரவக் குறைச்சலாக சிலர் நினைப்பார்கள். ஆனால் கண்ணீரும் சில தீமைகளை அழிக்கிறது. நன்மைகளை அளிக்கிறது. அவை பற்றி..
கண்ணீரில் உள்ள லைசோசோம் கண்ணில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. கண்களில் இருந்து கண்ணீர் வெளியாகும்போது இமைகளும் கண்விழிகளும் சுத்தமாவதோடு, பார்வையும் தெளிவாகிறது. துக்கத்தால் துவண்டிருக்கும்போது மனம்விட்டு அழுதால் துக்கம், கவலை எல்லாம் கரைந்து விடுகின்றன.
கண்ணீரால் கரையும் தீமைகள்
மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் மாங்கனீஸ் சத்து அழுவதன் மூலம் குறைகிறது. அழுகையானது ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. கண்ணீர் சருமத்தில் படும் போது அதில் உள்ள நச்சுகளை அகற்றி சருமத்தை பாதுகாக்கிறது. அழுகை வரும் போது அழுதுவிடுவதே நல்லது. ஒருபோதும் அதை அடக்கி வைக்கக்கூடாது. அது மனஅழுத்தத்தைத்தான் ஏற்படுத்தும்.
Related posts
Click to comment