ஆரோக்கியம் குறிப்புகள்

பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? மொபைல் போனுக்கு அடிமையாகும் பிள்ளைகள்

தொழில்நுட்ப முன்னேற்றம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இந்த காலத்தில் அதற்கு இணையாக இன்றைய தலைமுறையினரும் அப்டேட் ஆகிக் கொண்டே வருகிறார்கள்.

அது பள்ளி குழந்தைகளாக இருந்தாலும் சரி, டீன் ஏஜ் பருவமாக இருந்தாலும் சரி. நம்முடைய காலக்கட்டத்தில் தனி அறை என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படியே இருந்தாலும் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக சேர்ந்து தான் அந்த அறையிலும் படுத்து உறங்குவார்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தனக்கு தனி அறை வேண்டும், ஃபீரிடம் வேண்டும், டிவி வேண்டும், மொபைல் வேண்டும் என்கிறான். அதற்கு காரணம் சினிமா, நட்பு வட்டாரம், ஹைரேன்ஞ் என்ற பெயரில் பிள்ளைகளை வளர்க்க நினைப்பது எல்லாம் தான். ‘ஸ்மார்ட் ஃபோன்’ இந்த காலக்குழந்தைகளுக்கு இது இருந்தால் மட்டும் சோறு , தண்ணி, தூக்கம் ஏன் அம்மா, அப்பா யாரும் வேண்டும். இப்படி உலகம் மாறியதற்கு வெறும் தொழில் நுட்ப கண்டுப்பிடிப்புகளை மட்டும் காரணம் சொல்லி விட முடியாது.
e5trtrt
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு தாயின் பதிவு வைரலானது. அந்த பதிவில் அவர் கூறியதாவது, ‘ இரவு 8.30 மணி சில நேரங்களில் 9 மணி என் 3 டீன் ஏஜ் பிள்ளைகளும் அவர்களுக்கு ரூமுக்கு செல்வதற்கு முன்பு அவர்களின் செல்ஃபோன்களை எங்களிடம் ஒப்படைத்து தான் செல்வார்கள். இதை அவர்கள் கடைப்பிடிப்பது அவசியமான ஒன்று’ என்றும் தெரிவித்திருந்தார்.

குழந்தை வளர்ப்பு என்றவுடன் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லை. நமது பாசத்தை காட்டுவதற்காக வாங்கிக் குவிக்கப்படும் பொம்மைகளும் பரிசுப்பொருட்களும் இல்லை. அறமும், ஒழுக்கமும் கற்பிக்கும் உயரிய பொறுப்பு அது.

பிள்ளைகளுக்காக அதிகமாக பணம் செலவழிப்பதை விட அவர்களுடன் அதிகமான நேரம் செலவிட வேண்டும். கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுப்பதும் சரியான வளர்ப்பு முறை அல்ல. உண்மையிலேயே அந்த பொருள் அவசியம் தானா? நமது பொருளாதார நிலைக்கு அது அவசியமானது தானா? என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்கவேண்டியது நமது கடமை.
rdyttyty
அடம்பிடிக்கும் போதும் பெரியவர்களை மதிக்காமல் நடக்கும் போதும் கண்டிக்காமல் செல்லம் கொடுப்பதும் பல பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். அதிகமான கண்டிப்பு எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவு அதீதமான செல்லமும் பிள்ளைகளை கெடுத்து விடும்.

மொபைல் ஃபோனால் வரும் ஆபத்துக்கள்:

இணையதள விளையாட்டுகளை விளையாடுகிறபோதும் மட்டுமின்றி, விளையாடாத போதும் சதா அந்த நினைவோடு குழந்தைகள் இருந்தால் அதற்கு அவர்கள் அடிமையாகி விட்டார்கள் என்று அர்த்தம். இதுபோன்ற முறையற்ற கேம்ஸ். அதுமட்டுமில்லை மொபைல் ஃபோனுக்கு அடிமையாக்கிவிட்ட பிள்ளைகள் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதிக உடல் பருமன் தொடங்கி, மன உளைச்சல், கேட்டல் திறன் குறைதல், கண்ணின் வலிமை இழத்தல் இதுப்போன்ற உடல் பிரச்சனைகளையும் பிள்ளைகள் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button