31.9 C
Chennai
Monday, May 19, 2025
1476776081 7373
சட்னி வகைகள்

புதுமையான முள்ளங்கி சட்னி!!

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி – அரை கிலோ
வெங்காயம் – ஒன்று (பெரியது)
காய்ந்த மிளகாய் – 3
தக்காளி – ஒன்று
கறிவேப்பிலை – 1 கீற்று
புளி – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடி
பூண்டு – 6 பல்
கடுகு – தாளிக்க
எண்ணெய் – சிறிதளவு

செய்முறை:

முள்ளங்கியை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கவும்.

முள்ளங்கி (துருவி வைத்து கொள்ள வேண்டும்), தக்காளி, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி அனைத்தையும் வதக்கி வைத்து கொள்ளவும். வதக்கிய அனைத்து பொருள்களையும் சிறிதளவு உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். வதக்கியவற்றுடன் அரைத்து வைத்துள்ள கலவையை கொட்டிக் கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும். சுவையான புது வகையான முள்ளங்கி சட்னி தயார். இதனை இட்லி, தோசை, சப்பாதியுடன் பரிமாறலாம்.1476776081 7373

Related posts

பீட்ரூட் சட்னி

nathan

பீட்ரூட் சட்னி

nathan

காசினி கீரை சட்னி

nathan

லெமன் சட்னி

nathan

சூப்பரான புளி சட்னி

nathan

கேரளத்து தேங்காய் சட்னி

nathan

தயிர் சட்னி

nathan

கத்தரிக்காய் சட்னி

nathan

தக்காளி துளசி சட்னி

nathan