சட்னி வகைகள்

சூப்பரான கடலைப்பருப்பு தேங்காய் சட்னி

coconut chutney

காலையில் இட்லி அல்லது தோசைக்கு நல்ல சுவையான சட்னி செய்ய நினைத்தால், கடலைப்பருப்பு தேங்காய் சட்னியை முயற்சி செய்யுங்கள். இது மிகவும் சுவையாக இருப்பதுடன், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

இங்கு அந்த கடலைப்பருப்பு தேங்காய் சட்னியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – 1/2 கப்

தேங்காய் துண்டுகள் – 1 கையளவு

வர மிளகாய் – 3

தக்காளி – 1

கறிவேப்பிலை – சிறிது

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வர மிளகாய், தேங்காய், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.

பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து இறக்கினால், சுவையான கடலைப்பருப்பு தேங்காய் சட்னி ரெடி!!!

Related posts

கொள்ளு சட்னி

nathan

சுவையான தேங்காய் கறிவடகத் துவையல்

nathan

லெமன் சட்னி

nathan

சூப்பரான முட்டைக்கோஸ் சட்னி

nathan

சூப்பரான புளி சட்னி

nathan

கடலைப்பருப்பு சட்னி (KADALAI PARUPPU CHUTNEY)

nathan

தெரிஞ்சிக்கங்க…தக்காளி வெங்காயமே இல்லாமல் சுவையான சட்னி செய்வது எப்படி?

nathan

சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி

nathan

சுவையான முந்திரி சட்னி

nathan