சட்னி வகைகள்

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி

இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள காரசாரமான சட்னி இருந்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி
தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் – 10
பூண்டு – 10 பல்
வெங்காயம் – 1 பெரியது
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க :

எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

* பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

* வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அதில் புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற வைக்கவும்..

* நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.

* சுவையான பச்சைமிளகாய் சட்னி ரெடி.

* இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்,201702161301247350 green chilli chutney SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button