31.9 C
Chennai
Monday, May 19, 2025
25 1440505794 1 heart
மருத்துவ குறிப்பு

வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது?

வியர்வை வெளியேறுவதனால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் அந்த வியர்வையானது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதனாலோ அல்லது வெயிலில் நடந்து செல்வதாக இருந்தாலோ, எந்த வழியில் வியர்வை வெளியேறினாலும் அது நல்லது தான்.

வியர்வை வெளியேறுவது என்பது உடலின் தீவிர செயல்பாட்டின் ஓர் அறிகுறி. இந்த வியர்வையின் மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும். அதுமட்டுமின்றி வேறு சில நன்மைகளும் வியர்வை வெளியேறுவதன் மூலம் கிடைக்கிறது.

இப்போது வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

இதயம் வியர்வை வெளியேற்றத்தின் போது, உடலில் மற்றும் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்.

மனநிலை மேம்படும் உடற்பயிற்சி செய்து வியர்வை வெளியேறும் போது மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும் எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது.

டாக்ஸின்கள் வெளியேற்றம் வியர்வை மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதால், உடல் சுத்தமாவதோடு, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளும் வெளியேறி சருமமும் பொலிவோடு இருக்கும்.

சிறுநீரகம் வியர்வை அதிகம் வெளியேறினால் சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கலாம். எப்படியெனில் வியர்வையின் மூலம் உடலில் உள்ள உப்புக்கள் வெளியேறி, எலும்புகளில் கால்சியம் தக்க வைக்கப்படும். இதன் மூலம் சிறுநீரகங்களில் உப்பு மற்றும் கால்சியம் படிந்து கற்களாக உருவாவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி வியர்வை அதிகம் வெளியேறினால், தண்ணீர் அதிகம் குடிக்க தோன்றும். இப்படி தண்ணீர் அதிகம் குடிப்பதால், சிறுநீரகங்களின் செயல்பாடும் மேம்படும்.

காயங்கள் குணமாகும் சமீபத்திய ஆய்வு ஒன்றில், வியர்வைக்கும், காயங்கள் குணமாவதற்கும் சம்பந்தம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு வியர்வையானது ஆன்டி-பயாடிக்ஸை உடல் முழுவதும் பரப்பி, நுண் கிருமிகளிடமிருந்து நல்ல பாதுகாப்பு அளிப்பதே காரணம்.

உடல் வெப்பநிலை சீராகும் வியர்வை வெளியேறுவதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும் வியர்வைக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் சம்பந்தம் உள்ளது. அதனால் தான் காய்ச்சல் இருக்கும் போது வியர்வை வெளியேறினால், உடனே காய்ச்சல் குணமாகிறது.

25 1440505794 1 heart

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த காளான் சாப்பிட்டா பெண்களுக்கு குழந்தை சீக்கிரம் உண்டாகுமாம்…!

nathan

உங்களுக்கு தெரியுமா நெஞ்செரிச்சலுக்கு முக்கிய காரணம்

nathan

மனித உடலில் தேவையின்றி இருக்கும் பயனற்ற உடல் பாகங்கள்!!!

nathan

மூலிகைகளின் அற்புதங்கள்

nathan

குடைமிளகாய் மருத்துவ பலன்கள்

nathan

வலி, வீக்கத்தை போக்கும் புளிச்ச கீரை

nathan

தலைசுற்றலை போக்கும் இயற்கை வைத்தியம்

nathan

அலுவலக பணிகளில் பெண்களின் பங்கு

nathan

நகசுத்தி வீட்டு வைத்தியம்

nathan