மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…டயட் என்னும் பெயரில் பெண்கள் செய்யும் தவறுகள்!!!

ஆண்களை விட உடல் எடை பற்றி பல மடங்கு அதிகம் கவலை கொள்பவர்களும், கவனம் கொள்பவர்களும் பெண்கள் தான். வெளி தோற்றத்தின் மேல் அதீத அக்கறை காட்டுவதில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதனால் கொஞ்சம் உடல் எடை கூடினாலும் டயட் மேற்கொள்கிறேன் என எதையாவது பின்பற்ற தொடங்கிவிடுவார்கள். இது போல திடீர் திடீரென முருங்கை மரம் ஏறும் பெண்கள் உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் தங்களுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்கின்றனர்.

 

இங்கு விஷத்தை தவிர மற்ற எந்த உணவுமே முழுவதுமாக நலனையோ, கெடுதலையோ தருவது இல்லை என்பது தான் நிதர்சனம். அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் எந்த ஒரு உணவும் உங்கள் உடலுக்கு கெடுதல் தரும் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். அதேப்போல உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் உங்கள் உடலிற்கு தேவையான உணவுகளை அறவே ஒதுக்குவதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனையும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். இது போல உணவுக் கட்டுப்பாடு என்னும் பெயரில் பெண்கள் என்னென்ன தவறுகள் எல்லாம் செய்கின்றனர் என்று தெரிந்துக் கொள்ளலாம்…

அதிகப்படியான ஆலிவ் எண்ணெய் உபயோகித்தல்

ஆலிவ் எண்ணெய் உடல் நலத்திற்கு நல்லது தான். ஆனால் நிறைய பெண்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டில் அளவிற்கு அதிகமாக ஆலிவ் எண்ணெய்யை சேர்த்துக் கொள்கின்றனர், இது தவறான முறை என உடல் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் எடை குறையாது, அதிகம் தான் ஆகும்.

என்ன செய்ய வேண்டும்

1 டீஸ்பூன் அளவில் உபயோகிக்க வேண்டிய ஆலிவ் எண்ணெய்யை அதிகப்படியாக பயன்படுத்த வேண்டாம். அதனை அளவாகவே பயன்படுத்துங்கள்.

பழங்களை தவிர்ப்பது

சில பெண்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டில் பெரும்பாலான சத்துமிக்க பழங்களையும், அதில் கொழுப்புச்சத்து இருக்கிறது என தவிர்த்து விடுகின்றனர். நம் உடலுக்கு அனைத்து சத்துகளும் தேவைப்படுகிறது என்பதை பெண்கள் உணர வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்

ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை மற்றும் தர்பூசணி போன்ற உணவுகள் உங்கள் உணவுக் கட்டுப்பாட்டிற்கும் நல்லது, உங்கள் உடல்நலத்திற்கும் நல்லது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

குறைந்த உணவு, நிறைய உடற்பயிற்சி

பெண்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டில் செய்யும் மிகப்பெரிய தவறு, உடல் எடையை குறைக்கிறேன் என்று குறைவாக உணவு சாப்பிடுவது மற்றும் அதிகமாக உடற்பயிற்சி மேற்கொள்வது. நீங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள் எனில் அதற்கு ஏற்ப உணவை சாப்பிடுவதும் அவசியம். குறைவான உணவை உட்கொண்டு அதிக உடற்பயிற்சி செய்தால், வாந்தி, மயக்கம் ஏற்படும் என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்

நீங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள் எனில், உங்களது உடற்பயிற்சி ஆலோசகரிடம் நீங்கள் செய்யும் பயிற்சிக்கு ஏற்ப எந்தெந்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நட்ஸ் மட்டும் சாப்பிடுவது

பெண்களுக்கு பிடித்த உணவுகளில் நட்ஸ் முதன்மையாக இருக்கிறது. நட்ஸை அவர்கள் ஒருவகையில் உணவுக் கட்டுப்பாட்டிற்காக சாப்பிடுகிறார்கள் என கூறுவதை விட நொறுக்கு தீனியாக சாப்பிடுகின்றனர் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். வெறும் நட்ஸ் உணவு மட்டும் சாப்பிடுவது உங்கள் உடல் எடையை குறைத்துவிடாது. உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளடங்கிய உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

என்ன செய்ய வேண்டும்

இதற்கு பதிலாக, திணை மற்றும் தானிய வகை உணவுகளை நீங்கள் சாப்பிடுவது நல்ல பயன் தரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button