ht444900
மருத்துவ குறிப்பு

குறட்டையைத் தடுக்க நவீன கருவி

செய்திகள் வாசிப்பது டாக்டர்

குறட்டையைத் தடுக்கும் நவீன கருவி ஒன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வாங்கப்பட்டுள்ளது. ரூபாய் 12 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டிருக்கும் இந்த கருவி, டென்மார்க்கில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது.Cold ablation என்ற பெயர் கொண்ட இந்த கருவி செயல்படும் விதம் பற்றி மருத்துவர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.’ஒருவருக்கு மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படுவதால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது. இதனால்தான் மூச்சுக்காற்று அடைப்பு ஏற்பட்டு அவர்களது வாய் வழியாக சப்தம் வெளியேறுகிறது. இதையே குறட்டை என்கிறோம். இதுபோன்ற குறட்டையில் வெளியேறும் சப்தத்தின் அளவு 5 புள்ளி முதல் 10 புள்ளி வரை இருக்கலாம்.

இந்த அளவுக்கு மேல் சென்றால், அது சிக்கலானது. இதுபோல் அளவுகடந்த குறட்டையினால் தூக்கம் மட்டும் கெடுவதில்லை. ரத்த அழுத்தம் அதிகமாவது, சர்க்கரை நோய் ஏற்படுவது, மாரடைப்பு தாக்கும் அபாயம் போன்றவையும் ஏற்படுகிறது.அதனால் குறட்டையை சாதாரண பிரச்னையாக நினைக்காமல் உடனே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்’ என்று விளக்கமளித்த மருத்துவர்கள், இந்த கருவியின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதன்மூலம் குறட்டைவிடுவது சில நோயாளிகளுக்கு நின்றுபோனதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
ht444900

Related posts

இளம்பெண்கள் – இளைஞர்களை தாக்கும் கழுத்து வலி

nathan

ஆண்களால் முழு இன்பம் அடைய முடியாததற்கு என்ன காரணம்?

nathan

உடல் வீக்கத்தால் அவதியா? இதோ குணமாக்கும் மருந்து

nathan

பீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்

nathan

நீல நிற சங்குப் பூவை இந்த மாதிரி யூஸ் பண்ணினா இந்த பாதிப்பு உங்களுக்கு வரவே வராது தெரியுமா!!

nathan

மாதக்கடைசியில் பணம் இல்லாமல் அவதியா? இதோ ஐடியா

nathan

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான இயற்கை வழிமுறை

nathan

தெரிஞ்சிக்கங்க…இயற்கையான முறையில் பளிச்சிடும் வெண்மையான பற்களைப் பெற சில வழிகள்!!!

nathan

ரத்தச்சோகையைத் தீர்க்கும் முருங்கை இலைப் பொடி!

nathan