ஆரோக்கியம் குறிப்புகள்

பிறப்புறுப்புகளில் ஏன் சோப்பைப் பயன்படுத்தக் கூடாது?

பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

அதிலும் பலர் பிறப்புறுப்பில் அழுக்கு சேர கூடாது என்றும், துர்நாற்றமின்றி இருக்க வேண்டுமென்றும் நல்ல நறுமணமிக்க சோப்பைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு பல முறை கழுவுவார்கள்.

ஆனால் பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. பிறப்புறுப்பின் அருகே உள்ள சருமமானது மிகவும் சென்சிடிவ். அவ்விடத்தில் கெமிக்கலைப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

இயற்கை எண்ணெயை நீக்கும்

சோப்புக்களை பிறப்புறுப்புக்களில் பயன்படுத்தினால், ஏற்கனவே சருமத்தின் மேல் பகுதியில் உள்ள நல்ல பாதுகாப்பு தரும் இயற்கையான எண்ணெய் படலம் நீங்கி, அவ்விடத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.

நோய்த்தொற்றுகள

் இயற்கையாகவே பிறப்புறுப்பில் பாதுகாப்பை வழங்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அப்படி இருக்க, சோப்பை போட்டு நன்கு தேய்த்து கழுவினால், அப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கி, எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்பட வழிவகுக்கும்.

pH அளவு பாதிக்கப்படும்

சோப்புக்களை பிறப்புறுப்பில் பயன்படுத்தி கழுவும் போது, அது அவ்விடத்தில் உள்ள pH அளவை பாதித்து, கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சலையும் உண்டாக்கும்.

ஒருமுறை போதும்

பிறப்புறுப்பிற்கு சோப்பு போடவே கூடாது என்பதில்லை. தினமும் குளிக்கும் போது ஒருமுறை சோப்பை அதுவும் அளவாக பயன்படுத்தி கழுவலாம். இதனால் எவ்வித பிரச்சனையும் நேராது.

உப்பு தண்ணீர்

வேண்டுமெனில் பிறப்புறுப்பை வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கழுவலாம். இதனால் அவ்விடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

08 1431086583 public hair1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button