29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
​பொதுவானவை

சாம்பார் பொடி செய்வது எப்படி

கடைகளில் கிடைக்கும் சாம்பார் பொடியை விட வீட்டிலேயே செய்யக்கூடிய சாம்பார் பொடி சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

சாம்பார் பொடி செய்வது எப்படி
தேவையான பொருள்கள் :

துவரம் பருப்பு – 100 கிராம்
கடலைப்பருப்பு – 50 கிராம்
மிளகாய் வற்றல் – 1/4 கிலோ
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தனியா – 200 கிராம்
மிளகு – 20 கிராம்
சீரகம் – 20 கிராம்
வெந்தயம் – 5 கிராம்
பெருங்காயத்தூள் – தேவைக்கேற்ப

செய்முறை :

* மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து மிதமான தீயில் தனித்தனியாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளலாம்.

* இதில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்.

* இந்த சாம்பார் பொடி போட்டு சாம்பார் செய்தால் மணக்கும். மேலும் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

குறிப்பு:

சாம்பார் பொடி தயாரிக்கும் போது, வறுக்கும் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

Related posts

எலுமிச்சை ரசம் செய்முறை விளக்கம்

nathan

தவா பன்னீர் மசாலா

nathan

சத்தான கருப்பு உளுந்து சாமை கஞ்சி

nathan

வெந்தயக் கீரை ரசம்

nathan

உங்கள் காதல் உண்மையானதா?

nathan

தக்காளி மிளகு ரசம்

nathan

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

nathan

குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை பற்றி பெற்றோர் சொல்லித்தர வேண்டியவை

nathan

கம்பு வெஜிடபிள் கஞ்சி

nathan