30.6 C
Chennai
Saturday, May 18, 2024
​பொதுவானவை

உங்கள் காதல் உண்மையானதா?

 

உங்கள் காதல் உண்மையானதா?

காதல் என்பது ஆசை, அன்பு, நட்பு, காமம் ஆகிய உணர்வுகளில் ஒன்று அல்லது இவைகள் அனைத்தும் கலந்த ஒரு உணர்வு என்று பெரியார் கூறியுள்ளார். தற்போது காதல் செய்து சந்தோஷமாக இருப்பவர்களை விட, காதல் தோல்வியில் கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

இதற்கு காதலிக்கும் நபர் நம்மை உண்மையாக காதலிக்கிறாரா என்று தெரியாமல், கண்மூடித்தனமாக காதலில் விழுவது, காதலித்த பின்னர் அதை மறக்க முடியாமல் தவிப்பது… ஆகியவற்றை முக்கியக் காரணமாக சொல்லலாம். உங்களுடையது உண்மையான காதலா என்பதை கண்டறிய டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

* உண்மையாக காதலின் முதல் அறிகுறியே தியாகம் தான், காதலன்/காதலியின் சந்தோஷத்திற்காக எதையும் தியாகம் செய்வது.

* உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுடன், ஒவ்வொரு நாளும் ஸ்பெஷலாக உணரச் செய்வது, எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள்.

* உண்மையான காதலாக இருப்பின், நீங்கள் கஷ்டப்படுவதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது, நீங்களே எதிர்பாராதவிதமாக கஷ்டப்படுத்தினால் கூட அவர்கள் பதிலுக்கு உங்களை சந்தோஷப்படுத்தவே செய்வர்.

* உங்கள் காதலன்/காதலி சத்தியம் செய்து கொடுத்து எந்த ஒரு சூழ்நிலையிலும் அதனை மீறாமல் இருந்தால் உங்கள் மீது உயிரையே வைத்துள்ளார்கள் என்று அர்த்தம்.

* கஷ்ட காலத்திலும் உங்களை விட்டு விலகிவிடாமல், ஆறுதலாக இருப்பது, உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நிறைய கஷ்டத்தை தாங்கிக் கொள்வார்கள்.

* உங்கள் காதலன்/காதலி உங்களுக்கு பலவற்றை செய்தும், உங்களிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகி வந்தால், அந்த காதலை மிஸ் பண்ணிடாதீங்க!

Related posts

பெண்கள் வெறுக்கும் ஆண்களின் சில செயல்கள்

nathan

பூண்டு பொடி

nathan

கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

nathan

பெண் குழந்தைகளுக்கு முதல் நண்பன்… அப்பா

nathan

சுவையான உருளைக்கிழங்கு வெங்காய தோசை

nathan

சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளின் விளைவுகள்……

sangika

திருமணம் ஆகப்போகும் பெண்ணுக்கு தாய் கூறும் அறிவுரைகள்

nathan

கண்டதிப்பிலி ரசம்

nathan

எலுமிச்சை ரசம் செய்முறை விளக்கம்

nathan