30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
​பொதுவானவை

வெந்தயக் கீரை ரசம்

வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை ஆற்றும் மருத்துவ குணம் கொண்டது.

தேவையானப் பொருட்கள்:

வெந்தயக்கீரை – ஒரு சிறு கட்டு
தக்காளி – ஒன்று
புளி – நெல்லிக்காய் அளவு
மிளகு, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
காய்ந்த மிளகாய் – 3
மஞ்சள்தூள், பெருங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• வெந்தயக்கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.

• பூண்டை நறுக்கி கொள்ளவும்.

• தக்காளியை பொடியாக நறுக்கி வெட்டிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக்கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.

• வேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை போட்டு கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும்.

• மிளகு – சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.

• ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி பரிமாறலாம்.

Related posts

காதல் திருமணத்தை பெற்றோர் எதிர்க்க காரணம்

nathan

காளான் ஜின்ஜர் சிக்கன்

nathan

ஸ்வீட் கார்ன் புலாவ்

nathan

கேரளா இறால் கறி,TMIL SAMAYAL

nathan

சூப்பரான மசாலா தால்

nathan

சுவை மிகுந்த காளான் மசாலா

nathan

சத்தான கருப்பு உளுந்து சாமை கஞ்சி

nathan

பேச்சுலர்களுக்கான… ஈஸியான பட்டாணி மசாலா

nathan

சுவையான ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் செய்வது எப்படி?

nathan