​பொதுவானவை

எலுமிச்சை ரசம் செய்முறை விளக்கம்

எலுமிச்சை ரசம் வித்தியாசமான சுவையுடன் சுவையான இருக்கும். இப்போது எலுமிச்சை ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

எலுமிச்சை ரசம் செய்முறை விளக்கம்
தேவையான பொருள்கள் :

எலுமிச்சை – 2
தக்காளி – 1
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
தனியா – 1 தேக்கரண்டி
பூண்டு – 4 பல்
மிளகாய் வற்றல் – 1
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு நசுக்கி விட்டு பிசைந்து கொள்ளவும்.

* பூண்டு, மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

* எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி நசுக்கி வைத்திருக்கும் தக்காளிச் சாறு, அரைத்த மசாலா, மற்றும் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் தக்காளி மசாலா கலவையை சேர்த்து மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.

* ரசம் நுரைத்து கொதி வரும் சமயம் எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கி மூடி விடவும். எலுமிச்சை சாறு ஊற்றியவுடன் கொதிக்க விடக்கூடாது.

* சுவையான எலுமிச்சை ரசம் ரெடி.

* ரசம் அதிகம் கொதித்துவிட்டால் கசந்துவிடும்.201605301111196669 how to make lemon rasam SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button