33.1 C
Chennai
Monday, Aug 11, 2025
201612051233417771 sago onion uttapam SECVPF
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம்

ஜவ்வரிசியை வைத்து செய்யும் ஊத்தப்பம் சூப்பரான இருக்கும். ஜவ்வரிசி ஊத்தப்பம் எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

சூப்பரான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம்
தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி – 4 கப்,
உளுந்து – ஒரு கப்,
ஜவ்வரிசி – கால் கிலோ,
வெங்காயம் – 2,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும்.

* மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும்.

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும்.

* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி, சுற்றி எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

* சூப்பரான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம் ரெடி.

குறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.201612051233417771 sago onion uttapam SECVPF

Related posts

பேபி கார்ன் புலாவ்

nathan

மாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமா

nathan

கார மோதகம்

nathan

அமெரிக்கன் கார்ன் – சீஸ் பால்ஸ்

nathan

அவல் கேசரி : செய்முறைகளுடன்…!

nathan

பால் அடை பிரதமன்

nathan

இத்தாலியன் பாஸ்தா

nathan

சுவையான… கீமா மொமோஸ்

nathan

சிக்கன் உருளைக் கிழங்கு கட்லெட்

nathan