31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

கார மோதகம்

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய காய்கறிகள் (கேரட், முட்டைகோஸ், பேபிகார்ன், குடைமிளகாய்) – 1/2 கப்,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத்தூள் – 3/4 டீஸ்பூன்,
கொழுக்கட்டைமாவு – 1/2 கப்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கிய காய்கறிகளை போடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 3-4 நிமிடங்கள் சுருள வதக்கி ஆற விடவும். 1 கப் தண்ணீருடன் ஒரு சொட்டு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மாவில் தண்ணீரை வேண்டிய அளவிற்கு சேர்க்கவும். மாவை நன்கு வெண்ணெய் போல் பிசைந்து கொள்ளவும். மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து கையில் எண்ணெய் தடவிக் கொண்டு குழிவாக செய்து காய்கறி கலவையை 1 டீஸ்பூன் வைத்து மோதகம் மாதிரி செய்து மூடவும். இதே போல் எல்லாவற்றையும் செய்து மோதகத்தை ஆவியில் 10 நிமிடங்கள் வைத்து சூடாகப் பரிமாறவும்.

Related posts

சாக்லெட் சுவிஸ் ரோல்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பொரி சாட் மசாலா

nathan

பீர்க்கங்காய் தோல் துவையல்!

nathan

சர்க்கரைவள்ளிக்கிழங்கு பேன்கேக்

nathan

பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ்

nathan

கோதுமை அடை பிரதமன்

nathan

சூப்பரான கோதுமை பாஸ்தா

nathan

பாசிப்பருப்பு கடையல்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் உருளைக்கிழங்கு பால்ஸ்

nathan