30.6 C
Chennai
Saturday, May 18, 2024
23 1443006290 kheema momos
சிற்றுண்டி வகைகள்

சுவையான… கீமா மொமோஸ்

தற்போது மொமோஸ் மாலை ஸ்நாக்ஸாக பல இடங்களில் விற்கப்படுகிறது. இந்த மொமோஸில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மட்டன் கைமா கொண்டு செய்யப்படும் மொமோஸ். இது மிகவும் சுவையாகவும், பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

சரி, இப்போது அந்த கீமா மொமோஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
23 1443006290 kheema momos
தேவையான பொருட்கள்:

மைதா – 1 1/2 கப் தண்ணீர் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு…

மட்டன் கைமா – 250 கிராம் (வேக வைத்தது) எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன் கரம் மசாலா – 2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் சாட் மசாலா – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மைதா, உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கி, பின் பொடிகளைத் தூவி, அடுத்து அதில் வேக வைத்துள்ள மட்டன் கைமாவை சேர்த்து, உப்பு தூவி நன்கு தண்ணீர் வற்ற கிளறி விட்டு, இறக்கி வைக்க வேண்டும். பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து சிறு பூரி அளவில் தேய்த்து, நடுவே கைமா கலவையை சிறிது வைத்து, கூம்பு போன்று பிடித்து, இட்லி தட்டில் எண்ணெயை தடவி, அதன் மேல் வைக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து எடுத்தால், கீமா மொமோஸ் ரெடி!!!23 1443006290 kheema momos

Related posts

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி! tamil recipes

nathan

சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல்

nathan

கல்மி வடா

nathan

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

nathan

சேமியா பொங்கல்

nathan

செட் தோசை

nathan

சுவையான தட்டு வடை

nathan

தந்தூரி பேபி கார்ன்

nathan

முள்ளங்கி ஸ்பெஷல் உருண்டை

nathan