201611011434272288 Why Do not use the egg on the fridge SECVPF
ஆரோக்கிய உணவு

முட்டையை ஏன் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது தெரியுமா?

முட்டையை பிரிட்ஜில் வைத்து உபயோகிப்படுத்தக்கூடாது. அதற்கான காரணங்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.

முட்டையை ஏன் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது தெரியுமா?
வீட்டில் ப்ரிட்ஜ் இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ப்ரிட்ஜில் சமைத்த உணவுகள் அனைத்தையும் வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. இதனால் உடலுக்கு தான் தீங்கு விளையும். எப்படி சமைத்த உணவை ப்ரிட்ஜில் வைப்பது நல்லதில்லையோ, அதேப்போல் நாம் வாங்கும் முட்டையையும் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை பாலைப்போல் திரிந்துவிடுகிறதாம்.

ஐரோப்பிய முட்டை மார்கெட்டிங் ஒழுங்குவிதிகளின் படி, முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரித்து, பின் அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும் போது, முட்டையின் மேல் அதிகம் வியர்த்து, முட்டையின் ஓட்டில் உள்ள சிறுதுளைகள் வழியே பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து உள்ளே செல்லுமாம். எனவே முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து சாப்பிட்டு விட வேண்டும் அல்லது அறை வெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும்.

நாம் வாங்கும் முட்டை பிரஷ்ஷாக இருந்து, அதில் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக்கொண்டிருந்தால், அந்த முட்டையை ப்ரிட்ஜில் வைக்க கூடாது.

ஒருவேளை நீங்கள் வாங்கிய முட்டையில் சால்மோனெல்லா வகை பாக்டீரியா இருந்து, அதனை ப்ரிட்ஜில் வைத்து பராமரித்தால், இதர முட்டைகளும் அந்த கொடிய பாக்டீரியாவால் தாக்கப்படும். எனவே இதனைத்தவிர்க்க வேண்டுமெனில், அறைவெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும்.

ஒருவேளை முட்டையைப்பயன்படுத்தி கேக் செய்ய வேண்டுமெனில் முட்டையை ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்க கூடாது. ஏனெனில் ப்ரிட்ஜில் வைக்கும் முட்டையினுள் உள்ள கருவானது மிகுந்த குளிர்ச்சியுடன் இருப்பதால், அதைக்கொண்டு கேக் செய்ய நினைத்தால், அந்த கேக் கடினமாக இருக்கும்.

முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பாக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும்.

கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது. பாக்டீரியாக்கள் கொண்ட முட்டைகளை நாம் வாங்கியவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம்.

இந்த பாக்டீரியா சாதாரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்கமடைகின்றன. இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.201611011434272288 Why Do not use the egg on the fridge SECVPF

Related posts

30 நாட்கள் இஞ்சியை எடுத்துக்கொண்டால் நடக்கும் அற்புதம்-தெரிஞ்சிக்கங்க…

nathan

கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கும் நிலக்கடலை

nathan

சூப்பர் டிப்ஸ் கெட்ட கொழுப்பை கரைக்க சோயா பீன்ஸ் சுண்டல்..!

nathan

1 ஸ்பூன் வினிகர்+ 1 சிட்டிகை சமையல் சோடா நீரில் கலந்து குடித்தால் கிடைக்கும் ஆச்சரியமான பலன்கள் தெரியுமா!!

nathan

வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

nathan

இதோ எளிய நிவாரணம்! பல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி!

nathan

டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை மிளகு தோசை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

முட்டை கெட்டுவிட்டதா? இல்லையா? என கண்டுபிடிக்கும் வழிமுறைகள் !!!

nathan