30.3 C
Chennai
Monday, May 20, 2024
orange peel
ஆரோக்கிய உணவு

குப்பை என தூக்கி எறியும் இந்த இரண்டு பொருள்களில் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

பொதுவாக அடிக்கடி டீ, காபி குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிந்தும் நம்மில் பலருக்கும் அது ஒரு பழக்கமாக மாறி விட்டது. அந்த வகையில் டீ, காபியில் கூட உடலுக்கு நன்மை பயக்கும் பொருட்களை சேர்த்து குடிக்கலாம்.

அதிலும் குறிப்பாக நாம் பழங்களை சாப்பிட்டு குப்பை என தூக்கி எறியும் கொட்டை மற்றும் தோலில் இருந்து டீ போட்டு குடிக்கலாம். பழங்களின் கொட்டை மற்றும் தோலிலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

 

இரும்பு சத்து அதிகம் உள்ள பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் கொட்டையை தூக்கி எறிவதற்கு பதில் அந்த கொட்டையை வறுத்து பொடியாக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பால், பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.

இந்த விதையில் தாமிரம், செலினியம், இரும்பு போன்ற தாது உப்புக்கள் உள்ளதால் வாரம் ஒரு முறை இந்த டீயை குடித்து வர இரத்த சோகை, தோல் பிரச்னைகள் போன்றவை நீங்கும்.

ஆரஞ்சு பலத்தை சாப்பிட்டு விட்டு தோலை குப்பையில் போடுவோம். சிலர் அந்த தோலை அரைத்து சரும பொலிவிற்காக முகத்தில் பூசுவர்.
அதே போல் அந்த தோலில் உள்ள வெள்ளை பகுதியை நீக்கி விட்டு தோலை பொடியாக்கி அதனை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஏலக்காய் சேர்த்து சண்ட காய்ச்ச வேண்டும். பாதி டம்ளர் அளவு வந்த பிறகு தேன் கலந்து குடிக்காலம். இந்த தேநீரில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி கிடைக்கின்றது.

Related posts

தூதுவளை சூப்

nathan

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா? அப்ப இத படிங்க.

nathan

அவசியம் படிக்கவும்!இரவில் உணவை தாமதமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

nathan

அதிக அளவிலான நார்ச்சத்து எலுமிச்சை தோலில் செறிந்துள்ளதால் அல்சர் மற்றும் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆப்பிள் தோலில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

nathan

உங்களுக்கு தெரியுமா முட்டைகோஸ் வேகவைத்த நீரை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்

nathan

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் அதி சக்திவாய்ந்த பானம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

தினமும் இந்த ஜூஸ் குடித்து வந்தாலே நன்மைகள் ஏராளமாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான வெஜ் கட்லெட் செய்வது எப்படி?

nathan