ஆரோக்கிய உணவு

ஏலக்காய் – தேங்காய்ப் பால்

தேவையான பொருட்கள்:

பெரிய தேங்காய் -1
ஏலக்காய்-5 (பொடித்துக் கொள்ளவும்)
அரிசிமாவு-2 தேக்கரண்டி
வெல்லம்-100 கிராம் (பொடி செய்து கொள்ளவும்)
தண்ணீர்-500 மி.லி.

செய்முறை:

* தேங்காயை துருவி அதில் சிறிதளவு நீர் கலந்து மிக்சியில் இட்டு அரையுங்கள். அத்துடன் 250 மி.லி நீர் சேர்த்து வடிகட்டி முதல் பால் எடுக்கவும். மீதமுள்ள சக்கையில் மறுபடியும் சிறிது நீர்கலந்து அரைத்து, பிழிந்து இரண்டாவது பால் தயார் செய்யவும்.

* அடிகனமான பாத்திரத்தில் இரண்டாம் பாலுடன் வெல்லத்தூள் கலந்து கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயை குறைத்து விடுங்கள்.

* அரிசிமாவை சிறிது நீரில் கரைத்து, கொதித்துக் கொண்டிருக்கும் கலவையில் கொட்டுங்கள்.

* நன்றாக கொதித்த பின்பு முதல் பாலை சேருங்கள்.

* பின்பு ஏலக்காய் பொடி தூவி, அடுப்பில் இருந்து இறக்குங்கள்.

ஆடி மாதத்தில் பருவ நிலை மாற்றத்தால் சுற்று சூழல் மாறுபாடு அடையும். இந்த மாதம் வீசும் அதிகமான காற்றால் நோய் கிருமிகள் மூலம் தொற்று நோய்கள் உண்டாகும். தேங்காய்ப் பாலில் கிருமிகள், பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தியுள்ளதால், நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த தேங்காய்ப் பாலை மக்கள் பருகுகிறார்கள். தேங்காய்ப் பாலை ஒரு நேரத்தில் 150 மி.லி வரை பருகலாம். இது மிக சுவையானது.06e7c04a ffb6 4e48 99ef 2b133ead5765 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button