29.8 C
Chennai
Wednesday, May 14, 2025
201608111311084120 Men Avoid this type of Foods SECVPF
ஆரோக்கிய உணவு

ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஆண்கள் இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
தண்ணீர் குறைவாக குடிப்பதும் தவறு, அளவுக்கு அதிகமாக குடிப்பதும் தவறு. மேலும், அவரவர் உடல் எடை, வயது, உடல்நலம், வேலைபாடு குறித்து நீரின் அளவு வேறுபாடும். அளவுக்கு குறைவாய் தண்ணீர் பருகவதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது. நீர்வறட்சி உடல் பாகங்களில் செயற்திறன் குறைபாடு ஏற்பட காரணமாகிறது. முக்கியமாக சிறுநீரகத்தின் செயல்பாட்டை இது குறைக்கிறது.

கற்றாழை ஜீஸ் பருகுவது உடல் நலனுக்கு நல்லது என்பார்கள். உண்மை தான் செரிமானம், உடல் எடை குறைக்க, நோய் எதிர்ப்பை அதிகரிக்க இது ஊக்குவிக்கிறது. ஆனால், அளவுக்கு மீறினால் தசை பிடிப்புகள், கால்சியம் குறைபாடு போன்றவை உண்டாகும் அபாயமும் இருக்கிறது.

பால் உணவுகளில் இருக்கும் கால்சியம் நமது எலும்புகளின் வலிமையை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் இது அதிகமாக பால் உணவுகள் எடுத்துக் கொள்வது, உடலில் இருக்கும் இரும்புச்சத்து குறைய காரணமாகி விடுகிறது. மேலும், இது இரத்தசோகை ஏற்படவும் காரணியாக அமைகிறது.

நட்ஸ் அளவாக சாப்பிடுவது உடற்திறனை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்க உதவுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக நட்ஸ் உட்கொள்வது உடல் எடை அதிகரிக்க காரணியாக அமைகிறது. ஏனெனில், இவற்றால் கலோரிகள் அதிகம்.

நார்சத்து மிகுதியாக உள்ள ஓட்ஸ் செரிமானத்தை ஊக்குவித்து, உடல் எடை குறைக்கவும் சீராக பயனளிக்கிறது. மேலும் இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் கூட வெகுவாக உதவுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக ஓட்ஸ் உண்பதால், குமட்டல், வாயுப் பிரச்சனைகள் உண்டாக காரணியாகிவிடுகிறது.

– ஆண்கள் இந்த உணவுகளை தவிர்த்து விடுவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 201608111311084120 Men Avoid this type of Foods SECVPF

Related posts

நீங்கள் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள் இதை படிங்க…

nathan

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் உருளைக்கிழங்கு

nathan

பெண்களே மசாலா மீன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்கள்…

nathan

பதப்படுத்தாத அல்லது சமைக்காத அசைவ உணவு எச்சரிக்கை

nathan

மறந்துபோன மகத்தான மருத்துவ உணவுகள்!

nathan

ப்ராக்கோலி பெப்பர் ப்ரை

nathan

சுவையான சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்

nathan

ஆற்காடு… தலசேரி… மலபார்… திண்டுக்கல்… பிரியாணி உடல்நலத்துக்கு நல்லது… எப்படி?

nathan

அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும் உகாதி பச்சடி

nathan