32.2 C
Chennai
Monday, May 20, 2024
sl3747
சிற்றுண்டி வகைகள்

சொதி

என்னென்ன தேவை?

பயத்தம் பருப்பு 2 டேபிள்ஸ்பூன்,
உருளைக்கிழங்கு 1,
காய்கறிகள் பீன்ஸ்,
கேரட், பட்டாணி 1 கப்,
வெங்காயம் (சிறிய வெங்காயம்) 10,
இஞ்சி 1/2 துண்டு,
பச்சை மிளகாய் 3,
தேங்காய்ப் பால் 1 கப் (முதல் பால்), 1/2 கப் (2 வது பால்) மற்றும் 1 கப் (3 வது பால்),
உப்பு சுவைக்கேற்ப,
கிராம்பு 2,
லவங்கப்பட்டை 1 துண்டு,
எலுமிச்சை 1,
சீரகம் 1 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை 10 இலைகள்.

எப்படிச் செய்வது?

தேங்காயைத் துருவி, 3 முறை பாலெடுத்து, தனித் தனியே வைக்கவும். பயத்தம் பருப்பை வேகவைத்து மசித்துத் தனியே வைக்கவும். உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, லேசாக மசித்து வைக்கவும்.வெங்காயம், காய்கறிகளைப் பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு போட்டு, பிறகு வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், நறுக்கி வைத்த காய்களை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பிறகு, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

3வது தேங்காய்ப்பால் விட்டு, மூடிவைத்து, காய்கறிகள் வெந்ததும், மசித்து வைத்த உருளைக்கிழங்கு, பயத்தம்பருப்பு, உப்பு சேர்த்து, தீயை சிறியதாக வைத்து, 2வது தேங்காய்ப்பாலை விடவும். 3 நிமிடம் கைவிடாமல் கிளறவும். பிறகு, முதல் தேங்காய்ப்பாலை விட்டு நன்கு கலக்கவும். அடுப்பை அணைத்து விடவும். தேங்காய் எண்ணையில் சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். எலுமிச்சைப்பழம் பிழிந்து, நன்கு கலக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். ஆப்பம், இடியாப்பத்துடன் சூடாகப் பரிமாறவும்.sl3747

Related posts

மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan

சுவையான சத்தான தக்காளி கோதுமை தோசை

nathan

சுவையான உப்பு சீடை

nathan

கொய்யா இலை பஜ்ஜி

nathan

நேந்திரம் பழம் அப்பம்

nathan

சூப்பரான டிபன் பாஜ்ரா பூரி

nathan

மணத்தக்காளித் துவையல் செய்ய…..

nathan

இட்லி மாவு போண்டா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பானிபூரி சாட்

nathan