201606300708286482 Nutritious Tasty kollu podi SECVPF
ஆரோக்கிய உணவு

சத்தான சுவையான கொள்ளு பொடி

இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையான சத்தான கொள்ளு பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான கொள்ளு பொடி
தேவையான பொருட்கள் :

கொள்ளு – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 15,
பெருங்காயம் – ஒரு சிறு துண்டு,
கொப்பரைத் துருவல் – கால் கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

* பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும்.

* கொப்பரைத் துருவலை சிவக்க வறுக்கவும்.

* கொள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும்.

* வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று பொடிக்கவும்.

* இந்தப் பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டால். அசத்தல் சுவையில் இருக்கும். சூடான சாத்தில் எண்ணெய் விட்டு இதை கலந்து சாப்பிடலாம்.201606300708286482 Nutritious Tasty kollu podi SECVPF

Related posts

சுகருக்கு செலவே இல்லாத சூப்பர் தீர்வு…

nathan

நீண்ட கால ஆரோக்கியத்தை வழங்கும் சக்திவாய்ந்த தாவரங்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan

சுவையான நெத்திலி கருவாடு தொக்கு!

nathan

முருங்கைக்கீரை சாம்பார்

nathan

ஒரே ஒரு மூலிகை தண்ணி குடிச்சா உடல் எடை சீக்கிரமா குறையும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பழைய சோறு சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா?

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற சில சிறப்பான காலை உணவுகள்!

nathan

ஆண்களுக்கு உரமூட்டும் 6 உணவுகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெஜிடபிள் ஜூஸ்!

nathan