மருத்துவ குறிப்பு

கிட்னி பிரச்சினை வராமல் இருக்க வேண்டுமா?

சிறுநீரகங்கள்! உடல் உறுப்புகளில் மிக முக்கியமானதாகும். சிறுநீரக செயலிழப்பு என்பது தற்போதைய காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது என கூறினால் அது மிகையாகாது.

சிறுநீரக செயலிழப்பு சில அளவில், சுமார் 15%முதல் 25% மக்களைப் பாதிக்கிறது மற்றும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் மிகவும் தாமதமாகவே தோன்றி ஒரு தனிப்பட்ட நபரின் மேல் அமைதியாக பரவக் கூடிய நோயாக உள்ளது.

சிறுநீரக செயலிழப்பு வர காரணம் என்னவென்றால் நாள்பட்ட நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், நீண்ட கால சிறுநீரக வீக்கம், உப்பு அதிகம் உட்கொள்ளுதல், தினமும் ஊறுகாய் உட்கொள்ளுதல், அதிக அளவில் மது அருந்துதல், மருத்துவரின் ஆலோசனையின்றி அதிக அளவு மருந்துகளை பயன்படுத்துதல், சிறுநீரகத்திற்கு செல்லும் குருதி குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்படுதலே ஆகும்.

இவற்றால் உலகில் 8 முதல் 10 சதவீதமான மக்கள் சிறுநீரக நோயால் பாதிப்படைந்திருக்கிறார்கள்.

சிறுநீரக கல், சிறுநீரக குழாய் தொற்று உயர் இரத்த அழுத்தம் இதனை தொடர்ந்து சிறுநீரக செயலிழப்பு வரலாம். சிறுநீரகத்தின் பணிகள் என்னவென்றால் தினமும் உடலில் உண்டாகும் நச்சு பொருட்களை வடிகட்டி சிறுநீரில் கழிவுகளை அனுப்பும் முக்கிய பணியை செய்து வருகின்றது. தேவைக்கு அதிகமான உப்புக்களையும் தாதுக்களையும் பிரிக்கின்றது. இரத்தத்தின் கார அமில தன்னையை நிர்வகிக்கின்றது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பாதிப்புகள் என்ன?

மிக குறைந்த அளவின் சிறுநீர் வெளியேறுதல். நுரைபோன்ற சிறுநீர் வெளியேறுதல். சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல். சிறுநீரை வெளிபடுத்துவதில் சிரமம்.

கை, கால், முகம், வீங்குதல். உடல் தொடர்ந்து சோர்வடைதல். தோலில் சொறி மற்றும் அரிப்பு ஏற்படுதல்.

உணவின் சுவை அறிய இயலாமை. வாந்தி, குமட்டல், தலைவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல், கால் மற்றும் பக்கவாட்டு வலி ஆகியன காணப்படும்.

சிறுநீரக செயலிழப்பு நாள்பட்ட நிலையில் செந்நிற இரத்த அணு குறைந்து கொண்டே வரும்.

சிறுநீரகத்தில் பிரச்சினை உள்ளதை தொடக்கத்திலேயே கண்டறிந்து விரைந்து மருத்துவரை அணுகினால் அதிலிருந்து விடுபட முடியும்.

இப்போது சொல்லப் போகிறவர்கள்தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தாதவர்கள். * உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள். * ரத்த கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் * சிறுநீர்த் தடத்தில் அடிக்கடி தொற்று ஏற்படுபவர்கள். * புகைபிடிப்பவர்கள். * ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகசர்க்கரை நோய் உள்ளவர்கள். * நீரிழிவு காரணமாககிட்னி ஏற்பட்டுள்ள பரம்பரையில் பிறந்தவர்கள். * விழித்திரை பாதிப்பு உள்ளவர்கள். * அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்.

அறிகுறிகள்:

சிறுநீரகப் பாதிப்பின் தொடக்க கட்டத்தில் எந்த அறிகுறியும் வெளியில் தெரியாது. * பாதிப்பு தொடங்கிய சில மாதங்களில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். * விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டு, பார்வை குறையலாம். * முகம், கணுக்கால், கை, கால் ஆகியவை வீங்கும். * காலையில் எழும்போது கண் இமைகளுக்குக் கீழ் வீக்கம் உண்டாகும் * சிறுநீர் கழிவது குறையும். * பசி குறைவது, குமட்டல், வாந்தி, களைப்பு, மூச்சுத் திணறல், நாக்கில் உலோகச் சுவையுணர்வு, எலும்பு பலவீனம் போன்ற அறிகுறிகள்ஏற்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button