201606110735361838 Iron rich dry fruit milkshake SECVPF
பழரச வகைகள்

இரும்புச்சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்

குழந்தைகளுக்கு மிகவும் சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இரும்புச்சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள் :

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 10,
பால் – 2 கப்,
பாதாம் – 4,
முந்திரி – 4,
அக்ரூட் – 1 டேபிள் ஸ்பூன்,
தேன் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

* கால் கப் கொதிக்கும் நீரில் பாதாமை ஐந்து நிமிடம் போட்டு எடுத்து, தோலை நீக்கிக்கொள்ளுங்கள்.

* பாலை நன்கு காய்ச்சி இறக்கிவிட்டு, சூடாக இருக்கும்போதே அதில் பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி, அக்ரூட் ஆகியவற்றை ஊறவிடுங்கள்.

* நன்கு ஊறியதும் (பால் ஆறியதும்), தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து, குளிரவைத்துக் குழந்தைகள் கையில் கொடுங்கள்.

* குடித்து பார்த்து குழந்தைகள் குதூகலிப்பார்கள்.

* இந்த மில்க் ஷேக்கில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு கூர்ந்து கவனிக்கும் திறனையும், புதிய விஷயங்களைக் கிரகிக்கும் திறனையும் இது அதிகப்படுத்துகிறது.201606110735361838 Iron rich dry fruit milkshake SECVPF

Related posts

சுவையான சத்தான பாதாம் பால்

nathan

லெமன் பார்லி

nathan

Super tips.. மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் சப்போட்டா மில்க் ஷேக்

nathan

வெள்ளரிக்காய் வாழைத்தண்டு ஜூஸ்

nathan

சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி

nathan

கேரட் லஸ்ஸி

nathan

ஆச்சரியமான மாம்பழ ஸ்மூத்தீ

nathan

வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ்

nathan

குழந்தைகளுக்கான சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

nathan