32.5 C
Chennai
Wednesday, May 29, 2024
1474461370 0688
பழரச வகைகள்

கேரட் ஜூஸ், கிர்ணி ஜூஸ், ஜிஞ்சர் மோர் எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம்…

1. கேரட் ஜூஸ்

தேவையானவை:

கேரட் – 2
பாதாம் பருப்பு – 6
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
பால் – அரை லிட்டர்
சர்க்கரை – 100 கிராம்

செய்முறை:

கேரட்டைத் தோல் சீவிக் கழுவி, துண்டுகளாக்கி வேக வைக்கவும். பாதாம்பருப்பை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.

இரண்டையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன் சர்க்கரை, காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி பருகலாம். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம். இதில் விட்டமின் ஏ சத்து நிறைந்தது.

1474461370 0688

2. ஜிஞ்சர் மோர்

தேவையானவை:

மோர் – 500 மில்லி
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – சிறு துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டுக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளலாம்.

3. கிர்ணி ஜூஸ்

தேவையானவை:

கிர்ணி பழம் – 1
பால் – 500 மில்லி
சர்க்கரை – 100 கிராம்

செய்முறை:

கிர்ணி பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். காய்ச்சி, ஆற வைத்த பாலை சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் முன் ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாறலாம்.

குறிப்பு: கிர்ணிப் பழத் துண்டுகளுடன் வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். உடல் சூட்டைத் தணிக்கும்.

Related posts

சூப்பரான பப்பாளி ஜூஸ் எப்படி செய்வது?…..

sangika

வென்னிலா மில்க் ஷேக்

nathan

மசாலா மோர் செய்ய வேண்டுமா….

nathan

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி!

nathan

அட்டுக்குலு பாலு

nathan

குளுகுளு ஆப்பிள் சோடா செய்வது எப்படி

nathan

ஜில்.. ஜில்.. ஜிகர்தண்டா

nathan

ஆப்பிள் ஜூஸ்

nathan

பேரீச்சை காபி மில்க் ஷேக்

nathan