31.2 C
Chennai
Saturday, May 17, 2025
vadai 2873451f
சிற்றுண்டி வகைகள்

காய்கறி வடை

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு – 2

கேரட், கோஸ், சின்ன வெங்காயம் (நறுக்கியது) தலா 2 கைப்பிடியளவு

பச்சை மிளகாய் – 3

இஞ்சித் துருவல் – அரை டீஸ்பூன்

பொட்டுக்கடலை மாவு – கால் கப்

கடலைப் பருப்பு ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு

எண்ணெய், உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உருளைக் கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். கடலைப் பருப்பை ஊறவையுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கேரட், கோஸ், சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். ஆறியதும் அதனுடன் பொட்டுக்கடலை மாவு, கடலைப் பருப்பு, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித் தழை சேர்த்து தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள்.

பிசைந்த கலவையைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். சிறு தீயில் வேகவைப்பது நல்லது. இதையே உருண்டையாகப் பிடித்து கடலை மாவில் நனைத்து போண்டாவாகவும் செய்யலாம்.vadai 2873451f

Related posts

கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி

nathan

சோளா பூரி

nathan

மைதா சீடை

nathan

பேப்பர் ரோஸ்ட் தோசை

nathan

கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்வது எப்படி

nathan

பாசிப்பருப்பு டோக்ளா

nathan

சூப்பரான பொரி உருண்டை ரெசிபி

nathan

மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

nathan

சூப்பரான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம்

nathan