31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

முளயாரி தோசா

என்னென்ன தேவை?

மூங்கில் அரிசி 2 கப், உளுந்து முக்கால் கப், வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, தேங்காய் 1,சர்க்கரை தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

மூங்கில் அரிசியை அலசி எட்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். வெந்தயம், உளுந்தை தனித்தனியாக 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, முதலில் வெந்தயத்தையும் பிறகு உளுந்தையும் தண்ணீர் சேர்க்காமல் சிறிதுநேரம் அரைத்து, பிறகு அதோடு மூங்கில் அரிசியைச் சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்க விடுங்கள். புளித்த மாவை ஆப்பச் சட்டியில் ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு, மூடி வேகவிட்டு எடுங்கள். தேங்காயைத் துருவி, பால் எடுத்து, சர்க்கரை சேர்த்து கலக்கி முளயாரி தோசாவில் ஊற்றி ஊறவைத்துச் சாப்பிடலாம்.

Related posts

ஹமூஸ்

nathan

கொள்ளு சிமிலி உருண்டை

nathan

சுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி

nathan

வறுத்தரைக்கும் துவையல்-தேங்காய்த் துவையல்!

nathan

சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி

nathan

ஹோட்டல் சுவையை மிஞ்சிடும் ஈஸி இட்லி சாம்பார்…

nathan

தினை உப்புமா அடை

nathan

வாழைப்பூ அடை

nathan

குழந்தைகளுக்கான ரைஸ் நூடுல்ஸ் பான்கேக்

nathan