31.1 C
Chennai
Monday, May 20, 2024
images 2
சைவம்

சில்லி சோயா

சில்லி சோயா

தேவையானவை

சோயா – 100 கிராம்
வெங்காயம் – 2
வெங்காயம் பேஸ்ட் – 2 மேஜைக்கரண்டி
இஞ்சி – பூண்டு பேஸ்ட் – 2 மேஜைக்கரண்டி
குடமிளகாய் – 1
சோயா சார்ஸ் – 2 மேஜைக்கரண்டி
சில்லி சார்ஸ் – 2 மேஜைக்கரண்டி
டொமாடோ சார்ஸ் – 2 மேஜைக்கரண்டி
வைட் வினிகர் – 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் – 4-5
உப்பு – 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் – 5 மேஜைக்கரண்டி

செய்முறை

சோயாவை 10நிமிடம் வேக வைத்து பிறகு அதை தண்ணீரில் இருந்து தனியாக எடுத்து வைக்கவும் .பின்பு அதை வெங்காயம் பேஸ்ட் ,1மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு பேஸ்ட் ,1 மேஜைக்கரண்டி சோயா சார்ஸ் ,டொமாடோ சார்ஸ் ,சில்லி சார்ஸ் மற்றும் வினிகர் சேர்த்து 1மணி நேரம் ஊறவிடவும் .

எண்ணெயை சூடு செய்து ஊறவைத்த சோயாவை அதில் போட்டு 2 நிமிடம் கழித்து எடுக்கவும் .இதை ஒரு தட்டிற்கு மாற்றவும் .

மீதமுள்ள எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும் .பிறகு இஞ்சி -பூண்டு விழுது போட்டு 2-3 நிமிடம் வதக்கவும் அடுத்து அந்த சோயா சேர்த்து மீதமுள்ள சார்ஸ் ,உப்பு மற்றும் குடைமிளகாய் சேர்க்கவும் .நன்கு கலக்கி அதை மூடி வைக்கவும் .குறைந்த தீயில் 10 நிமிடம் வேக விடவும் .பச்சை மிளகாய் போட்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும் .images 2

Related posts

சோயா உருண்டை குழம்பு

nathan

கம்பு தயிர்சாதம் செய்வது எப்படி

nathan

முட்டைகோஸ் – பட்டாணி சாதம்

nathan

பச்சை மொச்சை உருளைக்கிழங்கு வறுவல்

nathan

பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

மண‌த்தக்காளி கீரை மசியல் செய்முறை விளக்கம்

nathan

வாழைப்பூ – முருங்கை கீரை வதக்கல்

nathan

சூப்பரான கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

nathan

சுவையான திணை அரிசி வெஜிடபிள் சாதம்

nathan