32.2 C
Chennai
Monday, May 20, 2024
vfd2
சைவம்

பச்சை மொச்சை உருளைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்:
பச்சை மொச்சை – 1 கப்
உருளைக்கிழங்கு – 1 (பெரியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
அரைக்க.
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
சீரகம் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பற்கள்

செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கு மற்றும் மொச்சையை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
பின்னர் விசில் போனதும் குக்கரை திறந்து, நீரை முற்றிலும் வடிகட்டி, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு கத்தியால் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் மொச்சையை சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து, நன்கு நீர் வற்றும் வரை வைத்து இறக்கினால் பச்சை மொச்சை உருளைக்கிழங்கு வறுவல் தயார்.vfd2

Related posts

அப்பளக் கறி

nathan

வெண்டைக்காய் பொரியல்

nathan

சத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி

nathan

கடாய் பனீர் – kadai paneer

nathan

தயிர்சாதம்

nathan

பாஸ்தா பிரியாணி

nathan

பனீர் வெஜ் மின்ட் கறி

nathan

வாங்கி பாத்

nathan

பத்திய சமையல் / கூரவு தோசை / கார சட்னி / புளி இல்லா கறி!

nathan