36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

சோயா உருண்டை குழம்பு

என்னென்ன தேவை?

சோயா உருண்டைகள் முக்கால் கப்,
வெங்காயம் 1,
தக்காளி 3,
இஞ்சி -பூண்டு விழுது 2 டீஸ்பூன்,
வறுத்துப்பொடித்த சீரகம் 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிதளவு,
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு தலா அரை டீஸ்பூன்,
சோம்பு ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த் தூள், உப்பு தேவையானஅளவு.

எப்படி செய்வது?

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். சோயாவைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருந்து, நன்றாகப் பிழிந்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வைத்திருந்து எடுத்து, தோலுரித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு போட்டு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, அரைத்த தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும், சோயா உருண்டைகளை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் (தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம் ) விட்டு, வறுத்துப் பொடித்த சீரகத்தைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

Related posts

சுவையான காலிஃப்ளவர் குருமா

nathan

காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்

nathan

சுவையான 30 வகை பிரியாணி

nathan

செட்டிநாடு காளான் மசாலா

nathan

கத்தரிக்காய் ரைஸ் செய்வது எப்படி

nathan

முளைகட்டிய பயிறு அகத்திக்கீரை சுண்டல்

nathan

வெங்காய சாதம்

nathan

ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்

nathan