2 peerkangai sambar 1663065968
சமையல் குறிப்புகள்

சுவையான பீர்க்கங்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

* பீர்க்கங்காய் – 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* துவரம் பருப்பு – 1 கப்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* சாம்பார் பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்

* புளி – 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* வரமிளகாய் – 1

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது2 peerkangai sambar 1663065968

செய்முறை:

* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

Peerkangai Sambar Recipe In Tamil
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பீர்க்கங்காயை சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

* பிறகு வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அத்துடன் சாம்பார் பவுடரை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

* அதன் பின் புளிச்சாறு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சாம்பாரில் ஊற்றி கிளறினால், சுவையான பீர்க்கங்காய் சாம்பார் தயார்.

Related posts

சமையல் மட்டும் முக்கியம் இல்லை இவற்றையும் கருத்தில் எடுங்கள்!

sangika

பெண் பிள்ளைகளுக்கு சமையல் கற்றுக் கொடுங்கள்

nathan

முட்டை சேமியா உப்புமா ரெசிபி

nathan

சுவையான பீட்ரூட் பொரியல்

nathan

சுவையான தேங்காய்பால் தக்காளி சாதம் – சுவையாக செய்வது எப்படி?

nathan

ருசியான அவல் கார பொங்கல்!….

sangika

கேரளா ஸ்டைல் கடலை கறி

nathan

சுவையான தட்டைப்பயறு குழம்பு

nathan

சுவையான பரோட்டா சால்னா

nathan