28.5 C
Chennai
Monday, May 19, 2025
qq6023 1
Other News

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாரா பகுதியை சேர்ந்தவர் ஜோஷி. நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவரைப் போலவே மருத்துவமனையில் பணிபுரிந்த கலைவாணனும் காதலித்து வந்தார்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரியோர்கள் சம்மதத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதையடுத்து தட்டார்மடம் அருகே கொம்மட்டிக்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமண சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜோஷி, கலைவாணன் இருவரும் கொம்மட்டிக்கோட்டை பதிவு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உளவுத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து காதல் ஜோடியை அழைத்து சமாதானம் செய்தனர். பதிவாளரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Related posts

எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடிய நாட்டிய முதல் தமிழ் பெண்

nathan

கழுதைப்புலிகளுக்கு அல்வா கொடுத்த மான்

nathan

பால் பண்ணை ஆரம்பித்த பிரபல சீரியல் நடிகை

nathan

ஆண்மை இல்லையா என எழுதிய பத்திரிகை..பழிவாங்க அஜித் செய்தது என்ன?

nathan

மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள்….

nathan

6 வயது சிறுமி 146 முறை சிலம்பம் சுழற்றி உலக சாதனை

nathan

காதலர் தின கொண்டாட்டத்தை துவங்கிய நடிகை சினேகா

nathan

தம்பியின் குழந்தையை பெற்றெடுத்த சகோதரி

nathan

மரம் வளர்ப்பை தவமாக செய்யும் 74 வயது முதியவர்!

nathan