கோடையின் பல்வேறு தொல்லைகளில் வியர்வையும் ஒன்று.
கோடையில் வாட்டியெடுக்கும் கடுமையான வெயில் காரணமாகவும், தொடர்ந்து வேலை செய்வதாலும் இயல்பாகவே பலருக்கு வியர்வை உண்டாகும்.
இந்த வியர்வையால் ஏற்படும் நாற்றம், நெருங்கிய நண்பர்களையும் கூட நம் அருகில் நெருங்கவிடச் செய்யாது. நம்மை அறியாமலேயே நடக்கும் இதுபோன்ற சங்கடங்களை எளிதாகத் தடுக்கலாம்.
தினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கிவிடும்.
இதேபோல், குளிக்கும் போது படிகாரத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றத்தை அது ஓரளவு குறைக்கும்.
குளித்த பின்னர் உடலில் வாசனை பவுடர்களை நிறைய பூச வேண்டும். காலை, மாலை இரு வேளைகளிலும் குளிப்பதால் வியர்வை நாற்றத்தை தடுக்க முடியும்.