31.7 C
Chennai
Sunday, May 18, 2025
gobi popcorn 1624100816
Other News

காலிஃப்ளவர் பாப்கார்ன்

தேவையான பொருட்கள்:

* காலிஃப்ளவர் – 1 (சிறியது)

* ஐஸ் கட்டி தண்ணீர்

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

* மோர் – 1/2 கப்

* சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்

* சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

மாவிற்கு…

* கோதுமை மாவு – 1 கப்

* சோள மாவு – 1/2 கப்

* பூண்டு பவுடர் – 1 டீஸ்பூன்

* வெங்காய பவுடர் – 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

gobi popcorn 1624100816

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு மூடி 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின் நீரை வடிகட்டி விட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அந்த காலிஃப்ளவர் துண்டுகளை ஒரு பௌலில் எடுத்து, அதில் ‘ஊற வைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கிளறி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மற்றொரு பௌலில் ‘மாவிற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஊற வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் போட்டு பிரட்டி, பின் ஐஸ் தண்ணீரில் போட்டு உடனே எடுத்து விட வேண்டும்.

* அதன் பின் மீண்டும் மாவில் பிரட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கோபி பாப்கார்ன் தயார்.

Related posts

மொட்டையடித்து வீடியோ வெளியிட்ட நடிகை காயத்ரி ரகுராம்…

nathan

இரவு பார்ட்டியில் நிதானம் இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

nathan

detan meaning in tamil – சூரிய கதிர்களின் பாதிப்பால் தோலில் ஏற்பட்ட கருமை

nathan

நெட்பிளிக்சில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது ‘ஜவான்’

nathan

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

nathan

கோடி கோடியாய் சொத்து சேர்த்து வைத்திருக்கும் தமன்னா

nathan

3-வது பட்டம் பெற்று நடிகர் முத்துக்காளை அசத்தல்!

nathan

60 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அரிய நிகழ்வு..,

nathan

இந்த விஷயங்கள உங்க கணவனிடம் நீங்க ஒருபோதும் எதிர்பாக்கவே கூடாதாம்…

nathan