31.7 C
Chennai
Saturday, Jun 1, 2024
gobi popcorn 1624100816
Other News

காலிஃப்ளவர் பாப்கார்ன்

தேவையான பொருட்கள்:

* காலிஃப்ளவர் – 1 (சிறியது)

* ஐஸ் கட்டி தண்ணீர்

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

* மோர் – 1/2 கப்

* சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்

* சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

மாவிற்கு…

* கோதுமை மாவு – 1 கப்

* சோள மாவு – 1/2 கப்

* பூண்டு பவுடர் – 1 டீஸ்பூன்

* வெங்காய பவுடர் – 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

gobi popcorn 1624100816

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு மூடி 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின் நீரை வடிகட்டி விட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அந்த காலிஃப்ளவர் துண்டுகளை ஒரு பௌலில் எடுத்து, அதில் ‘ஊற வைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கிளறி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மற்றொரு பௌலில் ‘மாவிற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஊற வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் போட்டு பிரட்டி, பின் ஐஸ் தண்ணீரில் போட்டு உடனே எடுத்து விட வேண்டும்.

* அதன் பின் மீண்டும் மாவில் பிரட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கோபி பாப்கார்ன் தயார்.

Related posts

விஜய் சேதுபதி எனக்கு அது குடுத்தாரு; ஓப்பனாக சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்!

nathan

கோடி சொத்து வைத்திருந்தாலும் எளிமையாக இருப்பவர்.., யார் இந்த தமிழ்ப்பெண் ?

nathan

தரமான தேன் விற்பனையில் மாதம் ரூ.5 லட்சம் டர்ன்ஓவர்!

nathan

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய பூர்ணிமாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

nathan

மொத்தமாக மாறிய அஜித்.! விடாமுயற்சி கெட்டப் சூப்பரா இருக்கே.. ரசிகர்கள் உற்சாகம்

nathan

விஜயகாந்துக்கு தொண்டையில் ஆபரேஷன்?

nathan

தெரிஞ்சிக்கங்க…கொரோனா வீட்டு தனிமை.. பின்பற்றவேண்டிய விஷயங்கள்!

nathan

நயன்தாராவின் படத்தில் நடித்த பிக் பாஸ் பூர்ணிமா!

nathan

விவாகரத்து பெற்ற தம்பதியரை மீண்டும் சேர்த்து வைத்த நீதிமன்றம் @ கேரளா

nathan