25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
onion tomato thokku 1609929674
சமையல் குறிப்புகள்

தக்காளி தொக்கு

தேவையான பொருட்கள்:

* பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகைப் போட்டு தாளிக்கவும். அதன் பின் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

* பிறகு கரண்டியால் தக்காளியை மசித்து விட்டு, 2 நிமிடம் மூடி வைத்து அல்லது பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும்.

* அடுத்து காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து மசாலா கருகாமல் ஒரு நிமிடம் வதக்கி, பின் கால் கப் நீரை ஊற்றி 2 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.

* தொக்கு பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான வெங்காயம் தக்காளி தொக்கு தயார்.

குறிப்பு:

* தொக்கு செய்வதற்கு பயன்படுத்தும் தக்காளி நன்கு கனிந்ததாக இருக்க வேண்டும்.

* மசாலா பொடிகளை சேர்த்த பின், பொடிகள் கருகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், மசாலா பொடிகளை சேர்த்ததும் ஒருமுறை கிளறிய பின் உடனே நீரை சேர்த்துக் கொள்ளுங்கள். மசாலா பொடி கருகிவிட்டால், தொக்கின் சுவை மோசமாக இருக்கும்.

* உங்களுக்கு இன்னும் சுவையானதாக வேண்டுமானால், கரம் மசாலாவை சேர்த்துக் கொள்ளலாம். அதோடு தாளிக்கும் போது சிறிது சோம்பு விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Related posts

வெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு!…

sangika

என் சமையலறையில்!

nathan

சுவையான பொங்கல் புளிக் குழம்பு

nathan

சுவையான பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி

nathan

சூப்பரான கரும்புச்சாறு பொங்கல்!….

sangika

இட்லி சாப்பிட்டு போரடிக்குதா? இப்படி செஞ்சு சாப்பிடுங்க

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

ருசியான பாசிப்பருப்பு கார சுண்டல்!

sangika

சூப்பரான சேமியா வெஜிடபிள் இட்லி

nathan