25.6 C
Chennai
Thursday, Nov 14, 2024
1 chapathi ladoo 1654006789
சமையல் குறிப்புகள்

சப்பாத்தி லட்டு

தேவையான பொருட்கள்:

* சப்பாத்தி – 6

* பொடித்த வெல்லம் – 3 டேபிள் ஸ்பூன்

* நெய் – 2 டேபிள் ஸ்பூன்

* நறுக்கிய பாதாம் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் சப்பாத்திகளை துண்டுகளாக்கிக் கொண்டு, மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் அரைத்ததை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் நெய், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து கையால் பிசைந்து விட வேண்டும்.

* பின்பு சிறிது கலவையை எடுத்து, அதை இறுக்கமாக உருட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்தையும் உருட்டினால், சப்பாத்தி லட்டு தயார். இந்த லட்டுகளை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால், 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

குறிப்பு:

* இந்த லட்டு செய்வதற்கு எஞ்சிய சப்பாத்திகளை பயன்படுத்தலாம் அல்லது புதிதாக சப்பாத்திகளை செய்தும் பயன்படுத்தலாம்.

* இந்த சப்பாத்தி லட்டுக்களை 2 நாட்கள் வரை அறை வெப்பநிலையில் வைத்து சாப்பிடலாம்.

* சப்பாத்தி லட்டுவிற்கு பாதாமை தவிர முந்திரி, பிஸ்தா என்று எந்த நட்ஸ்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* வெல்லம் இல்லாதவர்கள், சர்க்கரையை கொண்டும் செய்யலாம். ஆனால் சர்க்கரையை பயன்படுத்துவதாக இருந்தால், 2 1/2 டேபிள் ஸ்பூன் பயன்படுத்துங்கள் போதும்.

 

Related posts

பீர்க்கங்காய் கிரேவி

nathan

சுவையான வாழைக்காய் ரோஸ்ட்

nathan

சுவையான சுவையான சோமாஸ்!…

sangika

சூப்பரான சேனைக்கிழங்கு பொரியல்

nathan

சுவையான வெஜ் புலாவ்

nathan

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . .

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

nathan

சுவை மிகுந்த பன்னீர் ஒம்லட்!

nathan

சத்தான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?…

sangika