சமையல் குறிப்புகள்

சுவையான முருங்கைக்கீரை கூட்டு

கீழே முருங்கைக்கீரை கூட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முருங்கைக்கீரை – 2 கப்

Related Articles

* தக்காளி – 1 (நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/2 டீபூன்

* சாம்பார் பவுடர் – 1/2 டீபூன்

* துவரம் பருப்பு – 1/4 கப்

* பாசிப் பருப்பு – 1/8 கப்

* தண்ணீர் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* கடுகு – 1 டீபூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீபூன்

* சின்ன வெங்காயம் – 10 (தோலுரித்தது)

* எண்ணெய் – 2 டீபூன்

* பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)

அரைப்பதற்கு…

* தேங்காய் – 2 1/2 டேபிள் பூன்

* சீரகம் – 1/2 டீபூன்

* தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

* பின்னர் குக்கரில் வறுத்த பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பைப் போட்டு, 1 கப் நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்கவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் சிறிது நீர் சேர்த்து, மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு முருங்கைக்கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் தக்காளியைப் போட்டு மென்மையாக வதக்க வேண்டும்.

* பின் அதில் முருங்கைக்கீரை, மஞ்சள் தூள், சாம்பார் பவுடர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி மூடி வைத்து, கீரை நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும்.

* கீரை நன்கு வெந்துவிட்டால், அதன் நிறம் சற்று மாறியிருக்கும். இப்போது வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்ர்த்து, சில நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க விடவும்.

* மறுபுறம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* இறுதியில் தாளித்த கலவையை கீரையுடன் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால், முருங்கைக் கீரை கூட்டு தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button