31.7 C
Chennai
Saturday, Jun 1, 2024
12 1421063414 varagu pongal
சமையல் குறிப்புகள்

சுவையான வரகு சாமை சர்க்கரை பொங்கல்

பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை அனைவரும் பச்சரிசி கொண்டு தான் பொங்கல் செய்திருப்பீர்கள். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாகவும் ஆரோக்கியமானதாகவும் பொங்கல் செய்ய நினைத்தால், வரகு மற்றும் சாமை அரிசி கொண்டு செய்யப்படும் சர்க்கரை பொங்கலை செய்து படையுங்கள்.

உங்களுக்கு வரகு சாமை சர்க்கரை பொங்கலை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இங்கு வரகு சாமை சர்க்கரை பொங்கலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

வரகு – 1/4 கப்
சாமை அரிசி – 1/4 கப்
பாசிப்பருப்பு – 2 1/2 டேபிள் ஸ்பூன்
பால் – 1/8 கப்
வெல்லம் – 1/2 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் (முந்திரியை வறுக்க)
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
முந்திரி – 10
உலர் திராட்சை – 15

செய்முறை:

முதலில் வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை தட்டிப் போட்டு ஊற வைத்து, அடுப்பில் வைத்து பாகு தயார் செய்து இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, வரகு, சாமை அரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, மென்மையாக மசிக்கக்கூடிய அளவு வேக வைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் நன்கு வெந்த நிலையில் உள்ள வரகு கலவையில் வெல்லப் பாகு ஊற்றி கிளறி, அடுப்பில் வைத்து, 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் பால் சேர்த்து 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். இறுதியில் அதில் மீதமுள்ள நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்டிச சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், வரகு சாமை சர்க்கரை பொங்கல் ரெடி!!!

Related posts

சூப்பரான பீட்ரூட் குழம்பு ரெடி!…

sangika

சுவையான அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு

nathan

சுவையான பட்டர் குல்ச்சா

nathan

சுவையான கறிவேப்பிலை குழம்பு

nathan

வேகவைத்த முட்டையை தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும்?

nathan

சுவையான பட்டர் பீன்ஸ் குருமா

nathan

சுவையான ப்ராக்கோலி சப்ஜி

nathan

சூப்பரான சேனைக்கிழங்கு பொரியல்

nathan

சுவையான இறால் முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடுங்க

nathan