உடல் பயிற்சி

ஓட்டம், நடைப்பயிற்சியில் எது சிறந்தது

சிலருக்கு நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டால் விரைவில் உடல் எடை குறையும் என்ற எண்ணம் உள்ளது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

ஓட்டம், நடைப்பயிற்சியில் எது சிறந்தது
சிலருக்கு நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டால் விரைவில் உடல் எடை குறையும் என்ற எண்ணம் உள்ளது. ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எரிக்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது என்ற தவறாக கருத்து சிலரிடம் உள்ளது. மிகத் தவறான கருத்து.

நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல.

ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன.

எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம். இரண்டுமே சிறந்த பயிற்சிகள் தான். அவரவர் உடல் திறனுக்கு ஏற்ற பயிற்சியை மேற்கொண்டால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.201612221128063376 walking jogging running SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button