தேவையான பொருட்கள்:
சிக்கனுக்கு…
* எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம்
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகு தூள் – சுவைக்கேற்ப
* முட்டை – 1
* மைதா – 1/4 கப்
* சோள மாவு – 1/4 கப்
* எண்ணெய் – பொரிப்பதற்கு
சாஸ் செய்வதற்கு…
* எலுமிச்சை சாறு – 3 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் – 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு – 2 டீஸ்பூன் (துருவியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* சோள மாவு – 1 டீஸ்பூன்
* தண்ணீர் – 1/2 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் சிக்கனைப் போட்டு, அதில் மிளகுத் தூள், உப்பு, முட்டை, மைதா, சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பிறகு ஒரு பௌலில் சாஸ் செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களான எலுமிச்சை சாறு, சோயா சாஸ், பூண்டு, உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள், சோள மாவு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொரித்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, பின் பௌலில் வைத்துள்ள சாஸை சேர்த்து நன்கு கிளறி, 3-5 நிமிடம் குறைவான தீயில் கிளறி விட்டு இறக்கினால், சுவையான லெமன் பெப்பர் சிக்கன் ரெடி!