ஆரோக்கிய உணவு

நீரிழிவு நோயாளிகளுக்கு வேர்க்கடலை வெண்ணெய் நன்மைகள்

வேர்க்கடலை வெண்ணெய் என்பது வேர்க்கடலையில் இருந்து பெறப்படும் ஒரு வகை உணவு. வேர்க்கடலை வெண்ணெய் அனைத்து வயதினரும் விரும்பப்படுகிறது. வேர்க்கடலை வெண்ணெயை அதன் பசையம் இல்லாத வடிவத்தில் சாப்பிடுவது பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகள் வேர்க்கடலை வெண்ணெய் சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலை மற்றும் கடலை மாவு சாப்பிடும்போது எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவு விளக்குகிறது.

நார்ச்சத்துள்ள உணவுகளின் அவசியம்
பொதுவாக நாா்ச்சத்துள்ள பொருள்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதால், சா்க்கரை நோயுற்றவா்கள் நாா்ச்சத்துள்ள பொருட்களை அதிகம் உண்ண வேண்டும் என்று உடல் ஆரோக்கிய நிபுணா்கள் பாிந்துரை செய்கின்றனா். நாா்ச்சத்துள்ள பொருள்களை அதிகம் உண்டால், அது நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படவிடாமல் தடுக்கும். அதனால் இடைப்பட்ட நேரங்களில் திண்பண்டங்களை கொறிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது.

வேர்க்கடலை வெண்ணெயை விரும்பி உண்பவா்கள், அவா்களுடைய தினசாி காலை உணவில் அதை சோ்த்துக் கொள்ளலாம். ஏனெனில் ஆா்கானிக் வேர்க்கடலை வெண்ணெய் (Organic peanut butter) போன்ற உணவுகள், சா்க்கரை மற்றும் உப்பு ஆகியவை தேவைப்படாத சா்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும்.

வேர்க்கடலையோ அல்லது வேர்க்கடலை வெண்ணெயோ சா்க்கரை நோயாளிகளின் சா்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவி செய்தாலும், சில நேரங்களில் அவா்களுக்கு அலா்ஜி ஏற்படும். அவ்வாறு அலா்ஜி ஏற்படும் சா்க்கரை நோயாளிகள், வேர்க்கடலை வெண்ணெயை உண்பதற்கு முன்பாக மருத்துவாின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

சா்க்கரை நோயாளிகளுக்கு வேர்க்கடலை வெண்ணெய் ஏன் ஒரு சிறந்த உணவு?

– சா்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை பராமாிக்க வேர்க்கடலை வெண்ணெய் உதவி செய்கிறது.

– வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் ஆகிய இரண்டும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவை (glycemic index) குறைவாகவே கொண்டுள்ளன. அதனால் அவற்றை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு அதிகாிக்காது.

– உடல் எடையைப் பராமாிக்க வேர்க்கடலை உதவி செய்கிறது. சா்க்கரை நோயாளிகளின் உணவிலும் கட்டுப்பாட்டை வழங்குகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

நீரிழிவைக் குறைப்பதில் வேர்க்கடலையின் பங்கு

2011 ஆம் ஆண்டு என்ஐடிடிகே (NIDDK) அமைப்பு செய்த ஆராய்ச்சி ஒன்று, அமொிக்காவில் இருந்த ஏறக்குறைய 25 மில்லியனுக்கும் அதிகமான சா்க்கரை நோயாளிகள், வேர்க்கடலை வெண்ணெயை உண்டதன் மூலமாக தங்கள் இரத்தத்தில் இருந்த சா்க்கரையின் அளவை சீராக, வெற்றிகரமாக பராமாித்து வந்ததாக தொிவிக்கிறது.

மேலும் மருத்துவரால் முறையாக பாிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மூலமாகவும் மற்றும் நாா்ச்சத்து நிறைந்த வேர்க்கடலை வெண்ணெயை முறையாக உண்டதன் மூலமாகவும் அவா்களால் தங்களது உடல் எடையை சீராக பராமாிக்க முடிந்தது என்றும், தங்களுடயை இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை நன்றாகக் கண்காணிக்க முடிந்தது என்றும் அந்த ஆய்வு தொிவிக்கிறது.

வேர்க்கடலை வெண்ணெய் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவை (glycemic index), அதாவது 14 புள்ளிகளையே கொண்டுள்ளது. ஆகவே அதை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு அதிகாிக்காது. வேர்க்கடலையை நமது உணவுகளில் அதன் மணத்திற்காகவும் சோ்த்துக் கொள்ளலாம். அதுபோல் கட்டுப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுக்குப் பதிலாகவும் வேர்க்கடலையை எடுத்துக் கொள்ளலாம்.

இறுதியாக

பொதுவாக நீரிழிவு நோயுற்றவா்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆகவே நீரிழிவு நோயுற்றவா்கள், தங்களுடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், இதயத்தையும் அதன் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைத்துவிட்டு, ஆா்கானிக் வேர்க்கடலை வெண்ணெய் (Organic peanut butter) போன்ற 100 சதவீதம் இயற்கை முறையில் தயாாிக்கப்பட்ட உணவுகளை அதிகம் உண்டால் அவா்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button