சிற்றுண்டி வகைகள்

பூண்டு ஓம பொடி

தேவையான பொருட்கள்:

* பூண்டு – 6 பல்

* ஓமம் – 2 டீஸ்பூன்

பெப்பர் சிக்கன் ட்ரை பெப்பர் சிக்கன் ட்ரை

* கடலை மாவு – 2 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

சீத்தாப்பழம் மில்க் ஷேக்சீத்தாப்பழம் மில்க் ஷேக்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பூண்டு மற்றும் ஓமத்தைப் போட்டு சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த விழுதை வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டி வைத்துள்ள சாற்றினை ஊற்றி, தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை இடியாப்பம் பிழியும் குழலில் போட்டு எண்ணெயில் நேரடியாக பிழிந்து, நன்கு வறுத்து எடுக்க வேண்டும்.

* இதேப் போல் அனைத்து மாவையும் பிழிந்து எடுத்து குளிர வைத்து, பின் கையால் நொறுக்கி விட்டால், பூண்டு ஓம பொடி தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button