31.2 C
Chennai
Sunday, May 18, 2025
Menstrual fever and home remedies SECVPF
மருத்துவ குறிப்பு

மாதவிடாயின் போது வயிறுவலியால் அவதிப்படுகிறீர்களா? சூப்பரா பலன் தரும்!!

இந்த காலக்கட்டங்களில் பெண்கள் மனதளவிலும், உடல ரீதியாகவும் சேர்வாக காணப்படுவார்கள்.

குறிப்பாக அடிவயிற்று வலி. இது திவிரமாக இருந்தால் அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத அளவுக்கு சோர்ந்துவிடும் அளவுக்கு பலவீனமாக இருப்பதும் மற்றும் ஒரு காரணம்.

அதோடு வயிறு வலி தவிர்த்து இடுப்புவலி, கை கால்கள் நடுக்கம், கால் வலி, அடி முதுகுவலி பிரச்சனைகளும் உண்டாக கூடும்.

மாதவிடாயின் போது வயிறுவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த ஒரே ஒரு பானம் போதும் | 3 Days Menstruation Drink In Tamil

இரத்தபோக்கை அதிகம் கொண்டிருந்தால் இன்னும் அதிகமான வலியை எதிர்கொள்வார்கள்.இந்த வலிக்கு பெரும்பான்மையான காரணம் உடலில் போதுமான பலம் இல்லாததுதான்.

இதற்கு வலி நிவாரணி மாத்திரைகளை தான் போட வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில இயற்கை பொருட்களை கொண்டு கூட சரி செய்ய முடியும்.

அந்தவகையில் தற்போது மாதவிடாயின் முதல் மூன்று நாட்களும் கண்டிப்பாக குடிக்க வேண்டிய சூப்பரான பானம் ஒன்றினை பற்றி பார்ப்போம்.

மாதவிடாயின் போது வயிறுவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த ஒரே ஒரு பானம் போதும் | 3 Days Menstruation Drink In Tamil

தேவையானவை
பனைவெல்லம் – 1 ( சிறு உள்ளங்கையளவு)

நெல்லிக்காய் – 1

சுக்குப்பொடி – கால் டீஸ்பூன்

ஏலத்தூள் – கால் டீஸ்பூன்

எலுமிச்சை – சிறியதாக ஒன்று

தண்ணீர் – 2 டம்ளர் அளவு

தேன் – 1 டீஸ்பூன்

செய்முறை
தண்ணீரில் பனைவெல்லத்தை சேர்த்து கலக்கவும். அவை கரைவதற்குள் நெல்லிக்காயை துண்டுகளாக்கி மிக்ஸியில் அடித்து சாறை தனியாக எடுத்து சேர்க்கவும்.

பிறகு எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இறுதியாக தேன் சேர்த்து சுக்குப்பொடி, ஏலத்தூள் கலந்து நன்றாக கலந்தால் சத்து மிகுந்த பானம் தயார்.

நெல்லிக்காய் ஏராளமான சத்துக்களோடு இரும்புச்சத்தையும் கொண்டிருக்கிறது. இதில் ஆரஞ்சு பழத்தை காட்டிலும் 20 மடங்கு வைட்டமின் சி உள்ளது.

இரத்தபோக்கு அதிகரிக்கும் மாதவிடாய் காலத்தில் இழந்த இரத்தத்தை ஈடு செய்து உடலை பலவீனத்திலிருந்து பாதுகாக்கிறது.

Related posts

பெண்கள் அதிக நேரம் டி.வி. பார்ப்பது ஆபத்து

nathan

ஒற்றைத்தலைவலியைப் போக்க உதவும் 10 இயற்கை வழிமுறைகள்!

nathan

கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து: விஞ்ஞானிகள் தகவல்

nathan

உங்கள் குழந்தையோடு விளையாட நேரம் ஒதுக்குங்கள்

nathan

சோம்பு நீரின் மருத்துவ குணங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சுகப்பிரசவம் எளிமையாக நடைபெறுவதற்கான சில எளிய டிப்ஸ்…

nathan

மூக்கடைப்பு பிரச்சனைக்கு தீர்வு தரும் எளிய மருத்துவம்

nathan

சகோதரர்களுக்கு இடையேயான சண்டையை தவிர்க்க வழிகள்

nathan

படிக்கத் தவறாதீர்கள் உயிருக்கே ஆப்பு வைக்கும் லிப்ஸ்டிக்..உஷார்!

nathan