31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

பற்களின் மீது உள்ள மஞ்சள் கறைகள் நீங்க

சிலருக்கு பற்களின் மேல் மஞ்சள் கறை இருக்கும். அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றினால் படிப்படியாக நீங்கும்.

அன்றாட உணவில் கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு உறங்கும் முன் பல் துலக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும். இரவு தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை பற்களில் தேய்த்துவிட்டு, மறுநாள் காலை எழுந்தவுடன் கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் பற்களின் மேற்புறம் மற்றும் உட்புறத்தில் உள்ள கறைகள் நீங்கிவிடும். வெள்ளை எள்ளு விதையை, நன்றாக பொடி செய்து பற்களின் மேல் தேய்த்து வந்தால், பற்களின் மேல் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா, கல் உப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கிராம்பு பொடியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். மிக முக்கியமாக உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.-News & image Credit: maalaimalar

Related posts

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! பலருக்கும் தெரியாத கற்பூரத்தின் வியக்க வைக்கும் சில நன்மைகள்!

nathan

2 நிமிடம் காலில் இந்த இடத்தில் அழுத்துங்கள்: பல பிரச்சனைகள் குணமாகும்

nathan

சூப்பர் டிப்ஸ் அவஸ்தை தரும் இருமல், சளி வராமல் தடுக்கும் முறைகள்.!

nathan

உடல் குளிர்ச்சியாக வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!….

sangika

பாம்பு கடிக்கு மருந்தாகும் தவசு முருங்கை…!

nathan

இந்த உப்பு கொண்டு உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

nathan

வயிற்றில் செய்கின்ற எந்தெந்த செயல்கள் நமக்கு தீங்கை தரும் என்பதை இனி அறிந்து கொள்வோம்….

sangika

உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

nathan

தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க இத செய்யுங்கள்!…

sangika