31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

கருவை கலைக்க மாத்திரை உட்கொண்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே காரைமேடு வட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. கூலித் தொழிலாளியான இவருக்கும், செந்தூரை அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்த ரமணா (23) என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தரணி என்ற நான்கு வயதில் மகளும், ஹரிபிரசாத் என்ற இரண்டு வயதில் மகனும் உள்ளனர்.

 

இந்நிலையில், ரமணா ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். ரமணாவுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால், கர்ப்பத்தை கலைக்க தனியார் மருந்தகத்தில் மருந்து சாப்பிட்டுள்ளார். அதிக ரத்தப்போக்கு காரணமாக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், இறந்த பெண் குழந்தையை வயிற்றில் இருந்து அகற்றினர். இதனைத்தொடர்ந்து அதிக ரத்துப் போக்கு ஏற்பட்டதால் ரமணா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமணா செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையம் மற்றும் ஒடியர்பாளையம் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

2024ல் கனடாவிற்குள் வர புதிய கட்டுப்பாடுகள்..!

nathan

காதல் பட நடிகை சந்தியாவின் புகைப்படங்கள்

nathan

அசானி தொடர்பில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ள கருத்து

nathan

காலிஃப்ளவர் பாப்கார்ன்

nathan

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் மாயா…

nathan

தனுஷ் மீனா திருமணம் குறித்து நடிகர் ரங்கநாதன்

nathan

5 ராசிகளுக்கு ஒரு வருடம் துரதிஷ்ட காலமாக இருக்கும் – குரு பெயர்ச்சி

nathan

மொத்தமாக காட்டி கிறக்கமூட்டிய மாளவிகா! வேற லெவல் கில்மா

nathan

நான் சட்டம் படிக்காவிட்டாலும் சட்டம் குறித்து எனக்கு எல்லாமே தெரியும் – வனிதா கமல் மீது வழக்கு –

nathan